சேலத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு

நடைபயிற்சிக்கு சென்ற ரவி, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நேற்றிரவு நடைபயிற்சிக்கு சென்ற அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ரவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை  பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்த தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை ரவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரவி உயிரிழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com