அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

சோளிங்கரில் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதிய நகர செயலாளர் வாசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பெல்.கார்த்திகேயன், ஏ.எல்.விஜயன், சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழக மண்டல அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆர்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலை மற்றும் அண்ணா, ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட அவைத்தலைவர் ஜி.சம்பத், மாவட்ட பொருளாளர் ராமு, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மதர்சாகிப், நகர செயலாளர் வாசு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'அனைவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கட்சிக்காக அயராது பாடுபட வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகநாதன், நகர பொருளாளர் மணிகண்டன், எம்.வேலு, என்ஜினீயர் கணேசன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com