அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
Published on

வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் மட்டுமல்லாமல், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் இந்த அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தயங்குகிறது' என்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com