'அ.தி.மு.க. அரசியல் கட்சி அல்ல, வியாபார கம்பெனி'

‘அ.தி.மு.க. அரசியல் கட்சி அல்ல, அது ஒரு வியாபார கம்பெனி’ என்று நாகையில், டி.டி.வி. தினகரன் கூறினார்.
'அ.தி.மு.க. அரசியல் கட்சி அல்ல, வியாபார கம்பெனி'
Published on

நாகப்பட்டினம்:

'அ.தி.மு.க. அரசியல் கட்சி அல்ல, அது ஒரு வியாபார கம்பெனி' என்று நாகையில், டி.டி.வி. தினகரன் கூறினார்.

அ.தி.மு.க. வியாபார கம்பெனி

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று நாகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'அ.தி.மு.க. அரசியல் கட்சி அல்ல, அது ஒரு வியாபார கம்பெனி'. அங்கு அதிக முதலீடு செய்தவர்களுக்குத்தான் பொறுப்பு கொடுக்கப்படும். பா.ஜ.க .எதிர்க்கட்சி கிடையாது. ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்க்கட்சிதான்.

எதிர்க்கட்சியாக செயல்படவில்லை

மடியில் கனம் இருப்பதால் அ.தி.மு.க. முறையான ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. நாங்கள் ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்தி வருகிறோம். உண்மையான தொண்டர்கள் இருப்பதால்தான் அ.ம.மு.க. வளர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com