அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

அம்பை:

கல்லிடைக்குறிச்சி நகர அ.தி.மு.க. சார்பில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் என்று தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணாகுவதை கண்டித்தும், தரமான சாலைகளை பெயர்த்து குடிநீர் குழாய்கள் பதிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், குடிநீர் குழாய்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், அம்பை சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தலைமை தாங்கினார். கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்தின் புதிய குடிநீர் திட்டப்பணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் சேர்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்டக் கலை இலக்கிய பிரிவு செயலாளர் மின்னல் மீனாட்சி, மணிமுத்தாறு முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், சேரன்மாதேவி பழனி குமார், அம்பை ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, துணை செயலாளர் பிராங்களின், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரிராஜ், வக்கீல் செல்வ அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com