அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

செங்கோட்டை:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சா வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா. மாவட்ட துணைச்செயலாளா பொய்கை சோ.மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாநில அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சண்முகப்பிரியா, வீரபாண்டியன், சாமிநாதபாண்டியன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட சார்பு அணி செயலாளர் காத்தவராயன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com