தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள ஒன்றிய செயலாளார் நற்குணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
Published on

சீர்காழி:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை, குறுவை தொகுப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், நிவாரணங்கள் வழங்கி விவசாயிகளின் பாதுகாவலனாக திகழ்ந்தார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை தி.மு.க. அரசு பெற்று தர முடியாத காரணத்தால் மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி, தற்போது சம்பா சாகுபடி பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்று தராத தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், அ.தி.மு.க.வினர் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழையார். கே.எம். நற்குணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com