தென்காசியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com