பா.ஜ.க.வில் இணையப் போவதாக வெளியான தகவல்... முற்றுப்புள்ளி வைத்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எதிரணிக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி திடீரென பா.ஜ.க.வில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் நாளை பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில், மேலும் சிலர் பா.ஜ.க.வில் இணையலாம் என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் எக்ஸ் தளத்தில் 3 வருடங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட "என் இறுதி மூச்சு உள்ளவரை அ.இ.அ.தி.மு.க. மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்" என்ற பதிவை பகிர்ந்து, "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" என்று தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com