ஓபிஎஸ்-உடன் நடத்திய ஆலோசனை நிறைவு, முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

ஓ பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வர் பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ்-உடன் நடத்திய ஆலோசனை நிறைவு, முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு
Published on

சென்னை,

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது தொடர்பான விவாதங்கள், கடந்த சில நாட்களாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியது.

இந்த நிலையில், இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன், சிவி சண்முகம், உள்ளிட்ட 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்த மூத்த அமைச்சர்கள், அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கலாம் எனவும் அப்போது முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com