எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாளையங்கோட்டையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சங்கரன்கோவிலில் நடந்த அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

பின்னர் அவர் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் சங்கரன்கோவில் சென்றார்.

உற்சாக வரவேற்பு

வரும் வழியில் அவருக்கு நெல்லை மாவட்ட எல்கையான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும், மலர் கொத்துக்கள், பூங்கொத்துகள், பொன்னாடை, சிறிய அளவிலான எம்.ஜி.ஆர். சிலைகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநில வக்கீல் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, அமைப்புச் செயலாளர்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், ஏ.கே.சீனிவாசன், சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், தென்காசி மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான ஜெகநாதன் என்ற கணேசன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணைச்செயலாளர் நாராயணபெருமாள், துணைசெயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அந்தோணி அமல்ராஜா, கே.பி.கே.செல்வராஜ், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், ஞானபுனிதா, கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com