அ.தி.மு.க. மீதான சர்ச்சை விமர்சனம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா? பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
அ.தி.மு.க. மீதான சர்ச்சை விமர்சனம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா? பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பதில்
Published on

வி.பி.துரைசாமி தனது பேட்டியில், ஏழு மாத தி.மு.க. அரசு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஏதோ ஏழு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது போல் ஒரு சலிப்பு தெரிவதாகவும், இந்த ஆட்சிக்கு ஆதரவை காட்டிலும் மக்களின் அதிருப்தி குரல்கள் ஆங்காங்கே எழுவதை தன்னால் கேட்க முடிவதாகவும் கூறியுள்ளார். அ.தி.மு.க. மீதான பா.ஜ.க. சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய விமர்சனத்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்களா என்ற கேள்விக்கு, இது குறித்து அ.தி.மு.க. தலைமைதான் அக்கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு விவகாரம் குறித்து பேசுகையில், ஊர்திகளுக்கு அனுமதி கொடுப்பது மத்திய அரசால் நியமிக்கப்படும் கமிட்டிதான் என்றும் அங்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. அதேவேளையில் ஊர்திகளுக்கு சில நேரங்களில் அனுமதி மறுப்பது உண்டு என்றும் இது ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் நடந்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாத விவகாரம் பற்றி பேசுகையில், இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் படித்த அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொள்வது அநாகரீகத்தின் உச்சம் என்று கடுமையாக விமர்சித்துள்ள அவர், இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் பாராட்டியுள்ளார்.

மேலும் வரும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாகவும், தெளிவாகவும் பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com