

அதில், அவர் பேசும்போது, தமிழகத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாகவும், 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாவை தங்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்த அவர், அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலில் சிறப்பாக இயங்கி வருவதாகவும், எனவே உள்கட்சி தேர்தலுக்கு பிறகு ஒற்றை தலைமை நோக்கி கட்சி நகர வேண்டிய தேவை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
சசிகலா விவகாரம் குறித்து பேசுகையில், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்றும், கட்சியை பொறுத்தவரையில் அவர் அத்தியாயம் நிறைவு பெற்று விட்டதாகவும் கூறியுள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, தேர்தல் சமயத்தில் பா.ம.க.வின் ஆதரவை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், பலருக்கு பிரதமர் ஆசை இருப்பதால் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் இணைந்தால் இந்தியாவுக்கு ஆபத்துதான் என்றும், வரும் தேர்தலில் வென்று மீண்டும் மோடி பிரதமராக வருவார் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் கவர்னர் மற்றும் அரசு இடையிலான மோதலில் தி.மு.க. நிலைப்பாடு, நீட் பிரச்சினையில் தி.மு.க. வெற்றி பெறுமா? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளார்.