வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவர் கைது

தூத்துக்குடியில் வாலிபரை மதுபாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ராகவேந்திரா (வயது 22). இவர் சம்பவத்தன்று தாளமுத்து நகர் விவேகானந்தா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்த ராஜ் மகன் செல்வகுமார் (22) மற்றும் சிலர் சேர்ந்து ராகவேந்திராவை வழிமறித்து தகராறு செய்து உள்ளனர். திடீரென மதுபாட்டிலால் ராகவேந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய இருதயம் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com