விசாரணைக்கு அழைத்து சென்றபோதுபோலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ரூ.2 லட்சம் மோசடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணைக்கு அழைத்து சென்றபோதுபோலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Published on

சேலம்

ரூ.2 லட்சம் மோசடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசு வேலை

சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 34). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் பூவரசனிடம், தான் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் சத்துணவு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாக கூறினார்.

மேலும் அவரிடம் உங்களது மனைவிக்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதை நம்பிய பூவரசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆனந்தராஜியிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். இதையடுத்து ஆனந்தராஜ் பணி நியமன ஆணை ஒன்றை அவருக்கு வழங்கினார். பின்னர் அது போலி என்பது பூவரசனுக்கு தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகம் அருகே நின்ற ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் அவர் இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்கள், மடிக்கடிணிகள் உள்ளிட்டவை தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று காலை ஆனந்தராஜை போலீஸ் வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.

லாரி மோதி படுகாயம்

மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் அருகே சென்ற போது ஆனந்தராஜ் போலீசாரிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி அவரை இறக்கி விட்டனர். அங்கு சிறுநீர் கழித்துவிட்டு வாகனத்தில் ஏற வந்த போது திடீரென ஆனந்தராஜ் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

இதில் ஆனந்தராஜ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com