வாலிபர் மர்மசாவு

வாலிபர் மர்மமான முறையில் இறந்தார்.
வாலிபர் மர்மசாவு
Published on

திருப்புல்லாணி தோனிப்பாலம் அருகில் நேற்று முன்தினம் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து திருப்புல்லாணி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com