வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தற்கொலை
Published on

நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). பி.எஸ்சி பட்டதாரியான இவர், வேலை தேடி கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன், வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com