பருப்பில் கலப்படம்; ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருந்தது
சென்னை
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை, அம்மாவட்ட கலெக்டர் கண்டுபிடித்தார். அதற்கு காரணமான இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பருப்பில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள வாணிப கழக கிடங்குகள், ரேஷன் கடைகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கலப்பட பருப்பை அரசுக்கு வழங்கிய 5 தனியார் நிறுவனங்களை விசாரிக்கவும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story