விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்
Published on

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூர் மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வனப்பகுதியில் நேற்று திடீரென அதிக சத்தம் கேட்டதாகவும், ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

விமான விபத்து ஏற்பட்டதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தியதில், மேற்கண்ட தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. செந்துறை உள்பட மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விமான விபத்து ஏற்படவில்லை. எனவே விமான விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அச்சமடையவும் தேவையில்லை. மேலும், விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் யாரும் பரப்ப வேண்டாம்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com