மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளிலும் ஆலோசனைக் குழு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளிலும் ஆலோசனைக் குழு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் அண்மைக் காலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதில் சில மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நிகழாத வகையில் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறபட்டுள்ளதாவது;-

அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படாதவாறு வளாகச்சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

அதில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியரல்லாத பணியாளர் உள்ளிட்டோர் இடம்பெறவேண்டும். அக்குழு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், வளாகச் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

பள்ளியின் முதல்வர் நிரந்தர உறுப்பினராகவும், மற்றவர்கள் சுழற்சி முறையிலும் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 2 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அந்தப் பணியில் தொடரக் கூடாது. உறுப்பினர்கள் குறித்த விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com