வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
Published on

பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசினை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் (சனிக்கிழமை) அச்சங்கத்தினர் கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com