வழக்கறிஞர்கள் தொழில் தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது; தமிழ்நாடு பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டம் குறித்து சமூகவலைதளங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சென்னை
வழக்கறிஞர்கள் தொழில் தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது. சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது. போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டாலும் வழக்கறிஞர்கள் மீது
நடவடிக்கை பாயும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






