எம்.ஜி.ஆருக்கு பிறகு “கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

“தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு “கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை கருணாநிதி நீக்கிய பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற 10 சட்டசபை தேர்தல்களில் 7-ல் அ.தி.மு.க. வும், 3-ல் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் இதுவரையிலும் வேரூன்றவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு பல திரைப்பட நடிகர்கள், சிவாஜி முதல் கமல்ஹாசன் வரையிலும் கட்சிகள் ஆரம்பித்து இருந்தாலும், யாரும் நிலைத்து நிற்கவில்லை.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளே என்றும் நிலைத்து நிற்கும் கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை போட்டிகள் இருந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com