மீண்டும் 'மஞ்சள் பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி அருகே உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் மீண்டும் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மீண்டும் 'மஞ்சள் பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

தேனி அருகே வாழையாத்துப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு வாழையாத்துப்பட்டி கிராம தலைவர் ரெகுபதி தலைமை தாங்கினார்.

பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு கலந்துகொண்டு மஞ்சள் பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுமார் 1,000 மஞ்சள் பை வினியோகம் செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத்தலைவர் பொன்னையன், பள்ளி தலைமை ஆசிரியை வசந்தவள்ளி, ஆசிரியர்கள் கவுரி, கருப்பசாமி, பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com