எருமை திருடர்களை பிடித்த ஏஜெண்ட் பாட்டி...!

திருடப்பட்ட எருமைகளை கண்டுப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற முடிவில் மகனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
ஏஜெண்ட் பாட்டி ...!
Published on: 

மதுரை,

ஆசையுடன் வளர்த்த எருமை மாடுகளை திருடி சென்றவர்களை மூதாட்டி போலீசிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

எருமை திருட்டு

மதுரை மாவட்டம் அவணியாபுரம் அருகே பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் சீதையம்மாள் ( வயது 70). மகன்களுடன் வசித்து வரும் இவர் கால்நடைகளை மேய்த்து வருகிறார். இந்த நிலையில் வயல் வெளிகளில் கட்டப்பட்டிருந்த எருமைகளை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 8-ந்தேதி 1 எருமை திருடு சென்றுள்ளதாக மூதாட்டி தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் எதார்த்தமாக வெளியே வந்து பார்த்த சீதையம்மாள் 3 எருமை மாடுகள் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மீட்பு

பின்னர், எருமைகளை கண்டுப்பிடித்து வீட்டிற்கு திருப்பி கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் மகனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். மணப்பாறை சந்தையில் எருமை இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மூதாட்டி அவரது மகன்களுடன் இரவோடு இரவாக 3 பேருந்துகள் பயணித்து மணப்பாறை சென்றார்.

அங்கு சென்று பார்த்ததும் தான் வளர்த்த எருமைகளை அடையாளம் கண்ட மூதாட்டி பொதுமக்களின் உதவியுடன் அங்கிருந்து எருமைகளை மீட்டுள்ளார். பின்னர் அங்கு எருமைகளை திருடியவர்களையும் மூதாட்டி போலீசிடம் பிடித்து கொடுத்துள்ளார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com