காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து தலைஞாயிறு கடைத் தெருவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வக்கீல் அருண்சோரி வரவேற்றார். காங்கிரஸ் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா கலந்து கொண்டு பேசினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி அமைப்பாளர் இளையராஜா, காங்கிரஸ் மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, வட்டார தலைவர் கனகராஜ், நகர தலைவர் எழிலரசன், மாவட்ட துணைத் தலைவர் தஸ்லிம், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம், காங்கிரஸ் வட்டார பொருளாளர் மணீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com