தஞ்சையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர்கள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கிராம அலுவலர்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் தியாகராஜன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சிங்.ரவிச்சந்திரன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கார்த்திக், மாவட்ட தலைவர் சந்திரபோஸ், தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, திருவையாறு தாசில்தார் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

கைது செய்ய வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில், மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்பது, இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

போலீஸ் சம்பந்தப்பட்ட புகார்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களே அளிக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க போலீசில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும். ஊழியர்களுடன் அத்துமீறல் செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com