தமிழகத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் புதுப்பிப்பு

ஒப்பந்தத்தின் மூலம், தமிழகத்திற்கு வரும் 15 ஆண்டுகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும்.
தமிழகத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் புதுப்பிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடாகவிலுள்ள கைகா அனல் மின் நிலையத்திடமிருந்து 196 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய இன்று ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இதனால், தமிழகத்திற்கு 526 மெகாவாட் மின்சாரம் வரும் 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் பெருகி வரும் மின் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய இந்த மின் கொள்முதல் ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஒப்பந்தம் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின் வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழ்நாடு கல்பாக்கம் அனல் மின்நிலைய இயக்குநர் பி. வினோத்குமார் , கர்நாடக மாநிலம், கைகா அனல் மின்நிலைய இயக்குநர் சேஷய்யா முப்பராஜி மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் அ.ரா.மாஸ்கர்னஸ் இடையே இந்த ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com