பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கேளிக்கை வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்திவைப்பு

கேளிக்கை வரி விதித்ததை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கேளிக்கை வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்திவைப்பு
Published on

சென்னை,

கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை திரையுலகினர் பல கட்டங்களாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கையை வற்புறுத்தி வந்தனர். நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. நேற்று மாலை மீண்டும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை திரையுலகினர் சந்தித்து பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புதிய குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்?

பதில்:- எங்கள் தரப்பில் 8 பேர் குழுவில் இருப்பார்கள். அரசு தரப்பில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி:- நாளை (இன்று) சினிமா டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இருக்குமா?

பதில்:- எப்போதும் இருக்கிற கட்டணம்தான் நாளையும் வசூலிக்கப்படும்.

கேள்வி:-டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே கூறி இருந்தீர்களே?

பதில்:- ஏற்கனவே உள்ள டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரி (சரக்கு, சேவை வரி) சேர்த்து வசூலிக்கப்படும்.

கேள்வி:- மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.120 கட்டணத்துக்கு கூடுதலாக எவ்வளவு செலுத்த வேண்டும்?

பதில்:- கூடுதலாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்.

கேள்வி:-கேளிக்கை வரியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- கேளிக்கை வரி வேண்டாம் என்று சொல்லி இருக்கிறோம். குழுவில் விவாதித்து நல்ல முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா டிக்கெட்டுகள் மீதான 30 சதவீத கேளிக்கை வரி விதிப்பு பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதால், அந்த வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com