விவசாய கண்காட்சி

விழுப்புரத்தில் பாரம்பரிய விதை திருவிழா, விவசாய கண்காட்சி நேற்று தொடங்கியது.
விவசாய கண்காட்சி
Published on

விழுப்புரம்

தமிழ்நாடு- புதுச்சேரி பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் சார்பில் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஜெயசக்தி திருமண மண்டபத்தில் பாரம்பரிய விதை திருவிழா, விவசாய கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பாரம்பரிய நெல், காய்கறி விதைகள், கீரை விதைகள், அரிசி வகைகள், மூலிகை செடிகள் மற்றும் இயற்கை விளைபொருட்கள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழா பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையும், காலை 10.30 மணி முதல் மாலை வரை கருத்தரங்கமும் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இயற்கை முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, மாலை 6 மணி முதல் இயற்கையில் விளைந்த பல வகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட பல வகையான இட்லி திருவிழா, பல வகையான சுடச்சுட பாரம்பரிய பலகாரங்கள் விற்பனை திருவிழா நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com