சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.14¼ லட்சத்துக்கு ஏலம்

சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.14¼ லட்சத்துக்கு ஏலம் போனது.
சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.14¼ லட்சத்துக்கு ஏலம்
Published on

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தேங்காய் பருப்பு

இந்தநிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி ஏலத்திற்கு குறைந்த அளவிலான விவசாயிகள் வந்ததால் வரத்தும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக மொத்த ஏல மதிப்பு குறைந்துள்ளது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 8.52 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 635 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.81-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.25.35-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் என மொத்தம் ரூ.22 ஆயிரத்து 367-க்கு விற்பனையானது. அதேபோல் 175.05 குவிண்டால் எடை கொண்ட 322 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.79-க்கும், சராசரி விலையாக ரூ.84.89-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 4 ஆயிரத்து 385-க்கு விற்பனையானது.

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.14 லட்சத்து 26 ஆயிரத்து 752-க்கு ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com