ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்

நொய்யல் அருகே சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்
Published on

வேளாண்பொருட்கள்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் க.பரமத்திஒன்றிய பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 79.27 குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 416 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.26.15-க்கும், குறைந்த விலையாக ரூ.20.15-க்கும்,சராசரி விலையாக ரூ.23.46-க்கும் என ரூ.ஒரு லட்சத்து76ஆயிரத்து 304க்கு விற்பனை ஆனது.

ஏலம்

அதேபோல் 214.43 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.86.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.39-க்கும், சராசரி விலையாக ரூ.85.80-ம், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.60-க்கும், குறைந்த விலையாக ரூ.73.89க்-கும், சராசரி விலையாக ரூ.79.29-க்கும் என்று ரூ.17 லட்சத்து 29 ஆயிரத்து 152க்கு விற்பனை ஆனது.இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து 456-க்கு விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com