வேளாண் பொருட்கள் ரூ.33½ லட்சத்துக்கு ஏலம்

நொய்யல் அருகே சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.33½ லட்சத்துக்கு ஏலம் போனது.
வேளாண் பொருட்கள் ரூ.33½ லட்சத்துக்கு ஏலம்
Published on

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 62.93 குவிண்டால் எடை கொண்ட 18 ஆயிரத்து 368 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.89-க்கும், குறைந்த விலையாக ரூ.20.69-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ.1 லட்சத்து 47ஆயிரத்து 371-க்கு விற்பனை ஆனது.

தேங்காய் பருப்பு

அதேபோல் 292.69 குவிண்டால் எடை கொண்ட 628 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.75-க்கும், குறைந்த விலையாக ரூ.86.55-க்கும், சராசரி விலையாக ரூ.87.25-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.85-க்கும், குறைந்த விலையாக ரூ.72.16-க்கும், சராசரி விலையாக ரூ.83.75க்கும் என்று ரூ.24லட்சத்து 62ஆயிரத்து 14க்கு விற்பனை ஆனது.

சிவப்பு எள்

70.98 குவிண்டால் எடை கொண்ட 95 மூட்டை சிவப்பு எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.115.91-க்கும், குறைந்த விலையாக ரூ92.99-க்கும், சராசரி விலையாக ரூ.108.09க்கும் என ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து 651-க்கு விற்பனையானது.ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், ஆகியவை ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்து 36-க்கு விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com