மூலங்குடியில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

மூலங்குடியில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
மூலங்குடியில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி
Published on

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் செல்வி அனுஷா முன்னிலை வகித்தார். நிகழச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு, நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய விதைச்சான்று அலுவலர் சதீஷ் விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள், தரமான விதை உற்பத்தி பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிகண்டன், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து விளக்கம் அளித்தார். முடிவில் விவசாயி குமரேசன் நன்றி கூறினார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com