விவசாய பணிகள் பாதிப்பு

ஆலங்குளம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாய பணிகள் பாதிப்பு
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்மழை

ஆலங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, மேலாண்மறைநாடு, கொங்கன்குளம், தொம்ப குளம், கீழராஜகுலராமன், கல்லமநாயக்கர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இந்தநிலையில் ஏற்கனவே மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்தவதற்காக டிராக்டர் மூலம் வயல்களை நன்கு உழுது தயார் நிலையில் விவசாயிகள் வைத்து இருந்தனர்.

2-வது உழவு செய்து சாகுபடி பணியை தொடங்கி விடாலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். இதற்கிடையே தொடர்ந்து மழை பெய்ததால் உழவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 2-வது உழவு பணி தொடங்க முடியாமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்.

பருவம் தவறி விவசாயம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுடி பணிக்காக வயல்களை நன்கு உழுது தயார் நிலயில் வைத்திருந்தோம். அந்த சமயத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் 2-வது உழவு செய்ய முடியாத நிலை உள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எனவே பருவம் தவறி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com