விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
Published on

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒலியமங்கலம், மறவாமதுரை, கொன்னையம்பட்டி, காரையூர், மேலத்தானியம் ஊராட்சிகளில் வசதி படைத்தவர்களை இணைத்தும், உண்மையான பயனாளிகளை புறக்கணித்தும் வெளியிடப்பட்டுள்ள வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தகுதி உள்ள பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் வாழ்த்துரை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்களை அளித்துவிட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com