ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்வேளாண் அதிகாரி தகவல்

ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என்று விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்வேளாண் அதிகாரி தகவல்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடிப்பட்டம் தேடி விதை

கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடிப்பெருக்கு அன்று விவசாயிகள் பலரும், விவசாய பணிகளை மேற்கொள்வர். எனவே அதிக மகசூல் பெற தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த விதை அளவு, சீரான மற்றும் வேகமான முளைப்புத்திறன், சீரான பயிர் எண்ணிக்கை, ஒருமித்த பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சிப்பருவம், குறைவான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிக மகசூல் ஆகிய நன்மைகளை பெறலாம்.

எனவே விவசாயிகள், சான்று பெற்ற விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும். சான்று பெற்ற விதைகள் அனைத்தும் விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வில் வயல் தரம் உறுதி செய்யப்பட்டு பின்னர் விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைப்பரிசோதனை செய்து முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலவன், பிற பயிர் விதைகள் அனுமதிக்கப்பட்ட அளவு கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் வினியோகிக்கப்படுவதால் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.

பரிசோதனை செய்ய

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்ய விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி விதையின் தரம் அறிந்து விதைக்கலாம். அறுவடை செய்த விதையை அடுத்த விதைப்புக்கு சேமிக்கவும், விதையின் ஈரப்பதம் அறிந்துகொண்டு விதைகள், பூச்சிநோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் சேமிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com