

கரூர்,
கரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 78 ஆயிரத்து 517 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில், ஏப்ரல் முதல் இதுவரை மூவாயிரத்து 282 பேர் புதிதாக பதிந்தனர். அவ்வாறு பதிந்தவர்களில் 1,908 பேர் பேலியாக பதிந்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, லாலாப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயிக்கு 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்பேது அவரது வங்கிக் கணக்கில் இருந்து 8 ஆயிரம் ரூபாயை வேளாண் அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கிருஷ்ணராயபுரம் வேளாண் அலுவலரிடம் கேரியுள்ளார்.
இதனையடுத்து ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயிக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்தால், பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே அனைத்து ஆதாரங்களையும் வழங்கித்தான் பணம் பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். போலி பயனாளர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையின் போது, உண்மை விவசாயியிடம் இருந்து பணம் எடுத்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.