

சென்னை,
வருகைப்பதிவு குறைவான மாணவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கும்படி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வகுப்பறை கற்றல் மூலமே துடிப்பான வழக்கறிஞர்கள் உருவாக முடியும் என்று தெரிவித்தார். ஏ.ஐ. கருவிகள் ஒரு தகுதியான ஆசிரியருக்கோ, ஒரு தகுதியான விரிவுரையாளருக்கோ இணையாக முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் ஆன்லைன் வகுப்புகள் ஒருபொழுதும் நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ஏ.ஐ.யால் நேர்மை, ஒழுக்கம் போன்ற நெறிமுறைகளை கற்றுத் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.