

பெங்களூரு,
பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புதிய வகை மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து போலீசார் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், 'இணைய குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற் றும் இணையதளங்களில் கிடைக்கும் சில வினாடிகள் கொண்ட குரல் பதிவுகளை சேகரிக்கின்ற னர். பின்னர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் அதேபோன்ற குரலை உருவாக்கி. அவர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை தொடர்பு கொள்கின்றனர். அப்போது. தங்களுக்கு விபத்து அல்லது மருத்துவ உதவி தேவைப்படுவதாக கூறி, பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றனர்
.
யோசிப்பதற்கு நேரம் தராமல் உடனடியாக பணம் அனுப்புமாறு அழுத்தம் கொடுத்து பணம் பறிக்கின்றனர். அதனால் தெரியாத எண்களிலிருந்து அசல் உறவினர்கள் அல்லது நண்பர்களின் குரலில் அழைப்புகள் வந்து பணம் கேட்டால் உடனடியாக அனுப்ப வேண்டாம். அழைப்பவர் எவ்வளவு அவசரப்படுத்தினாலும், உங்கள் செல்போனில் சேமிக்கப்பட்டுள்ள அவர்களின் அசல் எண்ணிற்கு மீண்டும் அழைத்து உண்மையை கண்டறிய வேண்டும். அவசர குரலில் பேசுபவரிடம், நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே தெரிந்த தனிப்பட்ட அல்லது பழைய தகவல்களை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். சற்றே கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்படுவதன் மூலம் இத்தகைய போலி அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.