

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட தேர்தல் நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனாக கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்க உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இதேபோன்று தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கியதாக அறிவித்து உள்ளன.