அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

காலை, மாலை என இரண்டு வேளைகளில் 2 நாட்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.முதல் நாளான இன்று, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக நாளை காலை 9.30 மணிக்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், பகல் 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, நடப்பு அரசியல், பூத் கமிட்டி அமைப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com