

சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டு இருக்கிறது. அதில் வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக 25 பேர் வாக்களித்தனர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதில் இருதரப்பினரும், தங்களது கொறடா உத்தரவை மீறி இருப்பதால் அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாறி, மாறி சபாநாயகரிடம் மனு அளித்து இருக்கின்றனர்.
அதில் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறி 5-ல் இரண்டு பங்கு பேரிடம் கையெழுத்து பெற்று இருப்பதாக வேலுமணி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இந்த கூட்டம், பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.