எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அடுத்த கட்டமாக 5தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on: 

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, அதிமுகமாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப் பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ் நிலைக்கு இடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் நடை பெறுகிறது. இக்கூட்டம் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், அடுத்த கட்டமாக 5தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் பணிகள் குறித்தும், எஸ்.ஐ.ஆர் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், அடுத்த மாதம் நடத்தப்பட வேண்டிய கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுகூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X