

சென்னை,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னை புறநகர் மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பி.கே. சதீஷ்குமார் ஆகியோர் அவரவர் வசித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக வி.எம்.குமார் நியமிக்கப்படுகிறார். நகரச் செயலாளராக பி.செங்குட்டுவன், விக்கிரவாண்டி பேரூராட்சி செயலாளராக ஆர்.முருகன், வளவனூர் பேரூராட்சி செயலாளராக டி.கே.காசிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளராக கொட்டியம் சுபத்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.