

சென்னை
திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைக்க முயன்றதாக சி.வி.சண்முகம் இன்று காலையில் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக உடைவதற்கு எங்களை காரணம் சொல்கின்றனர். திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி.
திமுக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என திமுக தலைவர் அன்றைய தினமே தெரிவித்துவிட்டார். கம்யூனிஸ்ட் தலைவர் பேபி தான் கூறியதை வதந்தி என மறுத்துவிட்டார்.
பூட்டி வைத்துள்ளவர்கள் கதவை உடைத்து கொண்டு போவதற்கு காரணம் தேடுகின்றனர். நாங்கள் வெற்றிபெற்ற போது ஆடவில்லை. தோல்வி வந்தபோதும் வாடவில்லை.
1991 தேர்தலில் ஒரே தொகுதியில் தான் வென்றோம். அப்போது கூட திமுக உடையவில்லை.
சி.வி.சண்முகம் தரப்பை விஜய் சேர்த்து கொள்வாரா என அவரை கேட்க வேண்டும். சி.வி.சண்மும் எப்போதும் பதவியில் இருந்தவர். அவருக்கு பதவி ஆசை.திராவிட கட்சிகளுக்கு மாற்று என பேசிய விஜய் அதிமுக எம்.எல்.ஏக்களை ஏற்பாரா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் கட்சி மாறுவது, மைனாரிட்டி ஆட்சி என இதுவரை இல்லாத விஷயங்கள் நடந்து வருகிறது. திமுகவைப் பொருத்தவரை எந்த முடிவு வந்தாலும் நாங்கள் நிலையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.