அதிமுக முன்னாள் அமைச்சர் கார் மீது ஆசிட் வீசி வேட்பாளர் கடத்தல்...! சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது ஆசிட் வீசி மாவட்ட ஊராட்சிமன்ற துணை தலைவர் தேர்தல் வேட்பாளரை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கார் மீது ஆசிட் வீசி வேட்பாளர் கடத்தல்...! சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட ஊராட்சிமன்ற துணை தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. மொத்த 12 மாவட்ட கவுன்சிலர்களில் 6 பேர் திமுக தரப்பினர், 6 பேர் அதிமுக தரப்பினரும் இருந்துள்ளனர்

இந்த நிலையில் திருவிக என்பவர் அதிமுக சார்பில் ஊராட்சிமன்ற துணை தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளார். இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது காரில் ஆதரவாலர்களுடன் அழைத்து சென்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-கரூர் தேசிய நெடுஞ்சாலையின் நாகம்பட்டி பகுதில் சென்றபோது 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்த காரை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் கார் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.

மேலும், காரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் வந்த ஊராட்சிமன்ற துணை தலைவர் வேட்பாளர் திருவிகவை அந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com