அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 தனிப்படைகள் அமைப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 தனிப்படைகள் அமைப்பு
Published on

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் கடந்த 24-ந்தேதி பவானிசாகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒரு கும்பல் தன்னை காரில் கடத்திச் சென்று ஒன்றரை கோடி ரூபாயை பறித்துச் சென்றதாகவும் அதில் அரியப்பம்பாளையம் நேரு நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி மிலிட்டரி சரவணன், மோகன் மற்றும் அடையாளம் தெரியாத 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com