

கோவை,
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அய்யாசாமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். அய்யாசாமியின் உடலுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.