சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு...!

சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு...!
Published on

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்காக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ் தரப்பினர்தான் பேனரை கிழித்ததாக ஈ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர் பெஞ்சமின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ், ஈ.பி.எஸ் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசப்படலாம் என்பதால் அதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் இபிஎஸ் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com